இவ்வருடத்தின் முதல் சனிக்கிழமையில் வழமைபோல்
பூமாலை புனைந்தேற்றி புகழந்துபாடி மகிழந்தோம்.
அற்புதங்கள் தொடர அடுத்த வருடமும் ஆரம்பித்தது.
கங்காதரம் நம் வாழ்வின் ஆதாரம்.
பொங்கும் அவன் ஆசியதன் மூலாதாரம்.
இனிய பிறந்ததின வாழ்த்துகள்.
அன்புடன் ஜோதி, ரமணா, பெரியம்மா.
உயர்வுரு திருவருள் கலைமகளே
அனுதினம் அவளருள் நினைமனமே
அயர்வறு முயல்வருள் கலைமகளே
கசடறக் கற்றபின் நிலைமனமே
துயரறத் துணையருள் கலைமகளே
பயனுறு வாழ்வினைப் பயில்மனமே
வினையறு வித்தகக் குருமணியே
விரைந்தெனை ஏற்றருள் சரஸ்வதியே!
-ஜோதி.
முப்பது வருடம்
மூப்பது தவிர்த்து
ஐயநின் உருவம்
அகமதில் வளரும்
சொற்ப வாழ்விலும்
சோபிதம் மலர
ஏற்ப வாழ்ந்தவுன்
ஏற்றமும் உயர்வே!
நற்குஞ்சரக் கன்றை நண்ணிற் கலைஞானம்
கற்குஞ்சரக் கன்று காண் - அக்குஞ்சரக்கன்றை
அகம் போற்ற வரவேற்றால் முழுஞாலம்
முகம் போற்ற வாழலாங் காண்.
























No comments:
Post a Comment