Sunday, 27 December 2015

முகவேட்டில் என் கவிதை

https://www.facebook.com/permalink.php?story_fbid=10153448881819296&id=678649295

இவளோடு வாழ்ந்த கால நினைவோடு...

இவளோடு வாழ்ந்த கால
நினைவோடு வாழுகின்றேன்
எவரோடும் கோபம் இல்லை
நிறைவோடு வாழுகின்றேன்.

வருடங்கள் வந்து போகும் 
வாழ்க்கையும் தேய்ந்து போகும் 
பருவங்கள் மாறிப் போகும் 
முதுமையும் வந்து சேரும்.

இளமையின் உழைப்பை எல்லாம் 
ஈன்றவர்க் கிறைத்து வாழும்
கொடுப்பினை இல்லை என்று
கொடுப்பதை நிறுத்த வில்லை.

கொடுத்ததை எடுத்துக் கொண்டு
எடுத்ததை நன்றி கொன்று
அடுத்ததைப் பார்க்கும் வாழ்வில் 
யாரைநான் குற்றம் சொல்வேன்.

தடுத்ததைத் திருத்தும் பெற்றார் 
கடமையும் திருத்தம் பெற்றால் 
எடுத்தவர் எண்ணம் மாறும்
கொடுத்தவர் உள்ளந் தேறும்.

விடுகதை கவிதை சொன்னேன் 
விளக்கமாய் சொல்ல வந்தால் 
என்கதை முடிந்து போகும் 
என்பதை எண்ணிப் பார்த்தேன்.

இவளோடு வாழ்ந்த கால
நினைவோடு வாழும் என்னை
உயிரோடு வதைத்து வாழும்
உறவுகள் என்றும் வாழ்க.

Tuesday, 22 December 2015

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் ( உணர்த்தும் உண்மை – ஈசன் திருவருளால் )
( # உற்றவனை உணர்ந்து தரிசிக்க வேண்டி # )

நமசிவாய

ஆனந்த கூத்தன் அடிமைகள் பாதம் பணிகிறேன் 

ஆருத்ரா தரிசனம் என்ற நடராஜபெருமான் தரிசனத்தின் உணர்த்துவது குறித்த விளங்கவே இப்பதிவு.

ஏதோ ஆருத்ரா தரிசனம் என்று சொன்னார்கள் கூட்டத்தோடு சென்று அபிஷேகம் பார்த்து தீபாராதனை பார்த்து நம் வேண்டுதலை சொல்லி பயன்பெறுவோம் என்ற எண்ணத்தில் தான் பலர் செல்கிறார்கள்.

என்ன மற்ற நாளில் அபிஷேகம் பார்த்து தீபாராதனை பார்த்து நம் வேண்டுதலை சொல்லி பயன்பெற முடியாத?
வேண்டுதலை சொல்லித்தான் பெறவும் வேண்டுமோ ?

புராணம் சொல்லும் நிகழ்வு : 

தருகவனத்தில் உள்ள முனிவர்கள்  “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை”  என நாத்திகம் பேசி வந்தனர். அவர்களது அறியாமையை நீக்கிட வந்த சிவப்பெருமான் தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட யானையை தனது ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகப் பூண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை. 

நாம் உணரவேண்டிய உண்மை :

என் செயலால் நடக்கிறது, 

என் வேண்டுதலால் கிட்டிய  பலன், 

நான் செய்த தர்மத்தின் பலன்,

நான் இந்த தெய்வத்தை எல்லாம் தொழுததால் கிட்டிய செல்வம்,

என் பதவி, என் பொருள், என் பணம். என் பிள்ளைகள், என் சொந்தம் 

என்றும் மிக சிறிய வட்டத்துள் சுழன்றுகொண்டு, அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

நம் மீது மாபெரும் கருணைக்கொண்டு நம்மிடம் உள்ள நான் என்ற எண்ணத்தையும், என்னுடையது என்ற எண்ணத்தையும் அழித்து அந்த ஆணவத்தை தம் காலில் மிதித்து கொண்டு    
இதற்கும் மேலானவன் இருக்கிறான், இதற்கும் மேலான இன்பம் இருக்கிறது, என்று உணர்த்தும் தரிசனமே  ஆருத்ரா தரிசனம்.

ஆருத்ரா தரிசனம் செய்யும்போது நம்பெரும் அழகை கிழ்கண்டவாறு சிந்தித்தவண்ணம் தரிசித்து பாருங்கள் 
.
பணித்த சடைகொண்டு உலகியல் வாழ்வில் சிக்குற செய்து.

வளரும் பிறைகொண்டு நம்மை இன்புற குளிர்வித்து 

நீர் தரித்த நெற்றியில் நின் படைப்புகள் குறித்த சிந்தையுடன் 

மூடிய முன்றாவது கண் கொண்டு நம்மை மேலும் சிறப்புற வாழ்விக்கும் சிந்தை மேலோங்க.

குனித்தபுருவமுடன் கூடிய கண் கொண்டு நம்மை எப்பொதும் கண்காணித்த வண்ணம். 

நாம் உலகியல் இன்பத்தை அனுபவித்து ஆடும் ஆட்டங்களை புன்முறுவலுடன் ரசித்தவண்ணம்.

நமக்கு வரவிருக்கும் துன்பத்தை பாம்பாக  மாற்றி நம்மை அணுகவிடாமல் தம் மீது சூடிக்கொண்டு

 
உன் வாழ்வில் இதற்கும் மேலான நிலையை நீ அடையவேண்டும் அதையெல்லாம் அருளும் கரத்துடன் அருளி

 
என்னால் முடியாது என்ற எண்ணத்தை உன்னுள்ளே வராமல் இருக்கு அவற்றை  மறுகையால் புறம் தள்ளிவிட்டு.

மாயா மயக்கத்தில் உள்ளவனை உடுக்கை ஒலிகொண்டு தெளிவித்து.

இருளிய வாழ்கையில் கையில் உள்ள நெருப்பு கொண்டு ஒளிவித்து.

மேல்கூறிய வற்றை   சிந்தித்தவண்ணம் காணும்போது  ஆனந்த கூத்தனை நாம் மீது கொண்ட கருணையை உணர்விர்கள்.

அப்போது உங்கள் சிந்தையில் உன்னை எல்லாவிதத்திலும் வாழ்வித்து உன்னை மேலும்மேலும் உயர்த்த நான் ஒருவனே இருக்கேன் என்றும் உணர்த்தும் தரிசனமே ஆருத்ரா தரிசனம்.

மேல்கூறிய கருத்து ஈசன் திருவருளால் மட்டுமே தோன்றியது

திருச்சிற்றம்பலம்

Thursday, 17 December 2015






நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே!