Friday, 29 January 2016

தை











நான் ஒரு கூட்டுப் புழுவாக இருந்த பொழுது




நான் ஒரு கூட்டுப்புழுவாக
இருந்த பொழுது,
என்னைத் தாண்டிப் பறந்து
சென்ற ஈசல்கள்
என்னைப் பரிகாசம் செய்தன.
நான் இறைவனை வேண்டினேன்.
அன்பு சேவை என அழகான
இரு சிறகுகளை இறைவன் 
எனக்குத் தந்தான்.
நான் பட்டாம்பூச்சி ஆனேன்.
வானில் பறந்து சென்ற போது
என்னைப் பார்த்து ஏளனம் செய்த 
ஈசல்கள் தங்கள் சிறகுகளை இழந்து
எறும்புகளாக ஊர்ந்து திரிந்தன. - ஜோதி

Thursday, 28 January 2016

வெள்ளை நிற மல்லிகையோ

வெள்ளை நிற மல்லிகையோ
வேறெந்த மா மலரோ
வள்ளல் அடியினுக்கு வாய்த்த 
மலர் எதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல
வேறெந்த மலரு மல்ல
உள்ளக் கமல மடி 
உத்தமனார் வேண்டுவது.

சுவாமி விபுலாந்த அடிகள் 
(முன்னைநாள் திருகோணமலை 
இந்துக் கல்லூரி அதிபர்)




Sunday, 24 January 2016

பகவத் கீதை



புத்தனாவான்...



சித்தம் தெளிந்தவன் புத்தனாவான்
சித்தம் தெளியுமுன்  பித்தனாவான் 
சித்தம் தெளிவுடன்   பத்தனாவான்
சித்தம் அழிந்தபின்   முத்தனாவான்.






குன்றிலிருந்து...




குன்றிலிருந்து ஊற்றெடுத்துக் காடுகழுவிக் களனியாக்கி

நின்றுபோன இடத்தை ஒரு பாலையாக்கி

பண்டுபோன கடல் நிலத்தை நெயதலாக்கிக்

கொண்டுபோவதால் குறிஞ்சி முல்லை மருதம்

பாலை நெய்தல் என்று ஐந்ததிணை

கண்டு வாழ்ந்தார் சங்கத்தமிழர் அன்று.





மகிழ்ச்சி பகிர்ந்து கொள்வதனால் குறைவதல்ல.

Monday, 4 January 2016

பிறந்ததின வாழ்த்துகள் 2016

இவ்வருடத்தின் முதல் சனிக்கிழமையில் வழமைபோல் 
பூமாலை புனைந்தேற்றி புகழந்துபாடி மகிழந்தோம். 
அற்புதங்கள் தொடர அடுத்த வருடமும் ஆரம்பித்தது.
கங்காதரம் நம் வாழ்வின் ஆதாரம்.
பொங்கும் அவன் ஆசியதன் மூலாதாரம்.




இனிய பிறந்ததின வாழ்த்துகள்.
அன்புடன் ஜோதி, ரமணா, பெரியம்மா.



உயர்வுரு   திருவருள் கலைமகளே
அனுதினம் அவளருள் நினைமனமே
அயர்வறு    முயல்வருள் கலைமகளே 
கசடறக்     கற்றபின் நிலைமனமே
துயரறத்     துணையருள் கலைமகளே
பயனுறு      வாழ்வினைப் பயில்மனமே
வினையறு  வித்தகக் குருமணியே
விரைந்தெனை ஏற்றருள் சரஸ்வதியே!
-ஜோதி.


முப்பது வருடம் 
மூப்பது தவிர்த்து
ஐயநின் உருவம் 
அகமதில் வளரும் 
சொற்ப வாழ்விலும் 
சோபிதம் மலர
ஏற்ப வாழ்ந்தவுன்
ஏற்றமும் உயர்வே!



நற்குஞ்சரக் கன்றை நண்ணிற் கலைஞானம் 
கற்குஞ்சரக் கன்று காண் - அக்குஞ்சரக்கன்றை
அகம் போற்ற வரவேற்றால் முழுஞாலம்
முகம் போற்ற வாழலாங் காண்.