Friday, 11 March 2016

வாழ்த்துகளும் வைபவங்களும் 14/02/2016












காற்றடிக்குது மழையடிக்குது
கன்னிமழைவந்து கண்ணுக்குள் தைக்குது
அக்கக்கா கதவைத் திற என்
அக்கக்கா கதவைத் திற

நீ நேற்றுச் சொன்ன கதையெனக்கு
நினைவில் நிற்குது இங்கே
நேருகின்ற கதையைச் சொல்ல
நெஞ்சந் துடிக்குது
ஆற்றுவௌள்ளம் போலெ நெஞ்சம்
அலை புரள்கிறது இங்கே
யாருறவு என்னை வந்து ஆதரிக்கிறது

அக்கக்கா கதவைத் திற என்
அக்கக்கா கதவைத் திற

வாசல் தேடி ஓருறவு வருவதுமில்லை என்
வார்த்தைக்காக ஓருயிரும் வாழ்ந்ததும் இல்லை
பாச நேச வேஷமெல்லாம் பகலில் கரையுது இங்கே
காசுமட்டும் பேசவந்து கடை விரிக்கிறது

அக்கக்கா கதவைத் திற என் 
அக்கக்கா கதவைத் திற

ஓசையின்றி உடன் பிறப்புகள் ஓடியொழியுது பிள்ளைப்
பாசம்மட்டும் அவர் மனதை மூடி மறைக்குது
நீதியின்றி நேர்மையின்றி வாழ்ந்து போகிறார் பட்ட
நன்றிகூட மறந்து இவர் வாழ்ந்து காட்டுறார்

அக்கக்கா மனதைத் திற என்
அக்கக்கா உன் மனதைத் திற. 07/03/2014





குட்டிக் கண்ணன் சாடி பின்னால் 
கெட்டித்தனமாய் ஒளிக்கிறான் - உரலில் 
கட்டிவைத்து ஊரைக்கூட்டி 
யசோதையம்மா முறைக்கிறாள் - உலகை
கட்டிக்காக்கும் கடவுளையும் 
கட்டிப் போடும் தாய்மை - உலகம் 
சுட்டிக் காட்டும் தவறுகளைத் 
தட்டிக் கேட்கும் நேர்மை. - ஜோதி.









மும் மணத் தம்பதியர்க்கு
எம் மன வாழ்த்து என்றும் 
தம் மண வாழ்விலென்றும்
செம் மனம் சிறந்து வாழ்க.
















No comments:

Post a Comment